(google duplex assistant voice call dystopia)
தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம்.
இதனைத்தொடர்ந்து தற்போது கூகுள் டூப்ளக்ஸ் என்ற புதியகண்டுபிடிப்பை வெளியிட உள்ளது. இந்த தொழில்நுட்பமானது, நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறும். நண்பர்களுடன் உரையாடுவது போல் இந்த தொழில்நுட்பத்துடன் உரையாடலாம்.
இது தொடர்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியதாவது: கூகுள் அசிஸ்டென்டின் அடுத்த கட்டமான கூகுள் டூப்ளக்ஸ், வாட்டிக்கையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் டூப்ளக்ஸ் இன்னும் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை . அதன் முழு பயன்பாட்டை அடைவதற்கு இன்னும் சில சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்
OUR GROUP SITES