குவைத்தில், இந்தியர்களை இந்திய நாய்களே பேசியதாகப் பாடகர் அட்னான் சாமி வேதனை

0
644
Kuwait singer Adnan Sami Indian officials indifferent Indian dogs Tamil news

Kuwait singer Adnan Sami Indian officials indifferent Indian dogs Tamil news

குவைத் விமான நிலையத்தில் தன்னுடன் வந்த இந்தியர்களைக் குடியுறவுத் துறை அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகப் பாடகர் அட்னான் சாமி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த அட்னான் சாமி 2001ஆம் ஆண்டில் இருந்து மும்பையில் வாழ்ந்து வருகிறார்.

பாலிவுட் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களைப் பாடியும், தனியாக இசைத் தொகுப்புகளை வெளியிட்டும் புகழ்பெற்றவர். இவரது கலையுலகத் தொண்டைப் பாராட்டி இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய இசைக் குழுவினருடன் குவைத்துக்கு இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றார். அப்போது குவைத் விமான நிலையத்தில் குடியுறவுத் துறை அதிகாரிகள் சோதனையின்போது தன்னுடன் வந்த இசைக்குழுவினரை முறையாக நடத்தவில்லை என்றும், இந்திய நாய்களே என இழிவாகப் பேசியதாகவும்அவர் தெரிவித்துள்ளார். இது குறித்துக் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் டுவிட்டரில் தெரிவித்தும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என அட்னான் சாமி கூறியுள்ளார்.

Kuwait singer Adnan Sami Indian officials indifferent Indian dogs Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :