கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய தீ : 30 நிமிடம் போராடிய தீயணைப்பு படையினர்

0
1545
fire erupted katunayake airport

(fire erupted katunayake airport)
கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற வர்த்த நிலையத்தின் களஞ்சி அறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தை சுமார் 30 நிமிட கடும் போராட்டத்துக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீயை விமான நிலைய தீயணைப்பு பிரிவினரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் விமான பயணங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை