வரியை குறைக்க உள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

38
979
Macron reduce tax

எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும், மாற்றங்கள் வந்தே தீரும், ஏனென்றால் அதைத்தவிர வேறு வழியில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அதிரடியாக தெரிவித்துள்ளார். Macron reduce tax
தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தையும், சொத்துகளையும் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பிரான்ஸின் முந்தைய ஜனாதிபதி 30 சதவிகித வரி ஒன்றை அறிமுகம் செய்தார். ஏனென்றால், அந்தக் காலத்தில் பல செல்வந்தர்கள் குறைந்த வரி வீதமுடைய பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு இந்த வரியை நீக்க உள்ளதாக பிரான்ஸின் தற்போதைய ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு போராட்டங்களால் அவரை மக்கள் விமர்சிக்கும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தலாம் என்பதால், எத்தனை போராட்டங்கள் வந்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும், ஏனென்றால் அதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜனாதிபதி மக்ரோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிக முதலீட்டாளர்களைக் கவர்வதோடு, தற்போது 9.0 சதவிகிதமாக இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை இன்னும் குறைப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் அதிக வரி வசூலிக்கப்படும். இந்த நாடுகளில் ஒன்றாகிய பிரான்ஸின் வரியைக் குறைக்க விரும்புவதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி ஏற்கனவே அறிவித்துள்ள ரயில்வே துறையின் மாற்றங்கள் உட்பட பொதுத் துறையில் செய்யப்படும் மாற்றங்களைத் தொடர இருப்பதாகவும், எத்தனை போராட்டங்கள் வந்தாலும் அவற்றை கட்டாயம் நிறைவேற்றியே தீருவேன் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**