விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

0
820
mahathir arrested fake news case, mahathir arrested, mahathir, malaysia14 election, malaysia,

{ mahathir arrested fake news case }

மலேசியாவில், லெம்பா பந்தாயிலுள்ள கெரிஞ்சி பி.பி.ஆர். அடுக்ககத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்ட நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் கூடிய விரைவில் தாம் கைது செய்யப்படக்கூடும் என அங்கு கூடியிருந்தவர்களின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

சுமார் 1,500 பேர் முன்னிலையில் பேசிய அவர், 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படலாம் என அவர் சொன்னார். தாம் செல்லவிருந்த விமானத்தில் கீழறுப்பு வேலைகள் நிகழ்ந்ததாக தாம் கூறிய குற்றச்சாட்டிற்கு போலீஸ் தன்னிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொய் செய்தி உள்ளது. ஸாஹிட் ஹாமீடிதான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருப்பதாக என்னை பற்றி பொய் செய்தி வெளியிட்டார். அப்போதுதான், பொதுமக்கள் நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கருதுவார்கள் என நினைத்து ஸாஹிட் ஹாமீடி அவ்வாறு கூறினார். ஆனால், வாக்குகளை பெறுவதற்காக நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகின்றேன் என அங்கு கூடியிருந்தவர்களின் கரகோஷத்திற்கு நடுவில் துன் மகாதீர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, துன் மகாதீர் வழக்கம் போல் பிரதமர் நஜீப்பையும் பாஸ் கட்சியையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அனைவரும் பாரிசானுக்கு என கூறிய துன் மகாதீர் அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

சில வேளைகளில், கடந்த காலங்களை நினைத்து பார்ப்பதாக கூறிய அவர், அம்னோவின் தலைவராக இருந்த தாம் தற்போது அக்கட்சியை வீழ்த்த நினைப்பதாகவும் அக்கட்சி இனியும் அம்னோ இல்லை. மாறாக, நஜீப் கட்சி எனவும் துன் மகாதீர் கூறியுள்ளார்.

Tags: mahathir arrested fake news case

<< TODAY RELATED MALAYSIA NEWS>>

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!