இரத்தக் கரைகளுடன் ஆணின் சடலம் மீட்பு; கொலையா? என சந்தேகம்

0
826
Man body recovered murder suspect

(Man body recovered murder suspect)
சிலாபம் காக்கப்பள்ளிய பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 52 வயதுடையவர் என்றும் அவரின் உடலில் இரத்தக் கரைகளுடனான காயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமைக்கான அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடும் பொலிஸார், சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags; Man body recovered murder suspect