மீண்டும் தங்களை நிரூபித்த ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள்!! : சுருண்டது பஞ்சாப்!

0
846
sunrisers hyderabad vs kings xi punjab match news today

(sunrisers hyderabad vs kings xi punjab match news today)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசையை தினறடித்த ஹைதராபாத் அணி அபார வெற்றிபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஹைதராபாத் அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மனிஷ் பாண்டி 51 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பஞ்சாப் அணிசார்பில் அனிகிட் ராஜ்பூட் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் கே.எல்.ராஹுல் 32 ஓட்டங்களையும், கிரிஸ் கெயில் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்படி இந்த வருடத்தில் சன்ரைசஸ் அணி குறைந்த ஓட்டங்களை பெற்று, வெற்றிபெற்ற இரண்டாவது சந்தர்ப்பாக இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

முதலாவதாக மும்பை அணிக்கெதிரான போட்டியில் 118 ஓட்டங்களை பெற்று, மும்பை அணியை 87 ஓட்டங்களுக்கு சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>