{ Right Ways Maintain Child Health }
குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது. குழந்தைகளின் உடல் நலம் பேண மிகச்சிறந்த வழிகள் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர். முறையான சிகிச்சை முறைகள் தெரியாமல், சின்னதொரு விடயத்திற்கு மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டி, வாரம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயவது செலவழிக்கின்றனர்.
சிறிய குடும்பமாகவும், தனிக்குடித்தனம் போன இளம் பெற்றோர்களுக்கு உண்மையிலேயே குழந்தை வளர்ப்பு, குழந்தை நலன் பேணுதல் பற்றி தெரியாமல் தவித்து போய் விடுகின்றனர்.
*குழந்தைகளின் அஜீரணக் கோளாறு சரிசெய்ய
குழந்தைகளின் அஜீரணக் கோளாறு Digestive Disorder நீங்க ஒரு டீஸ்பூன் கிரைப் வாட்டரில் 5 துளிகள் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து கொடுத்தால் அஜீரணக் கோளாறு சரியாகிவிடும்.
*குழந்தைகளின் பேதி சரியாக
குழந்தைகளுக்கு பேதி Diarrhea போவது சரியாக மாதுளம் பழத்தோலை காய வைத்து, பொடியாக்கி அதை ஐந்து கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து அதை குழந்தையின் நாக்கில் தடவ பேதி சிறிது நேரத்தில் நின்றுவிடும். மாதுளம் பழத்தோலுக்கு பதிலாக ஜாதி பத்ரி பொடி 5 கிராம் எடுத்தும் தேனில் குழைந்து குழந்தையின் நாக்கில் தடவலாம்.
*குழந்தைகளின் உடல் நல்ல வளர்ச்சி பெற
தாயின் இடுப்பு எலும்பின் வழியாக இந்த உலகத்தை காண வரும் குழந்தைக்கு உடல் வலியும் இருக்கும். பலா தைலம் என்ற தைலத்தை குழந்தையின் உடல் முழுவதும் தடவி இலேசாக மசாஜ் செய்வதால் குழந்தையின் உடல் வலி போகும். குழந்தைக்கு புத்துணர்வு கிடைக்கும்.
*குழந்தைகளின் சுவாச கோளாறு நீங்க
குழந்தைகளின் சுவாச கோளாறு நீங்குவதற்கு தேங்காய் எண்ணெயை சூடு செய்து, அதில் பச்சை கற்பூரம் பொடியாக்கிப் போட்டு நெஞ்சிலும், மூக்கிலும் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். சுவாச கோளாறுகள் நீங்கும். நன்றாக மூச்சு விட முடியும். மூச்சு திணறலால் தவிக்கும் குழந்தைகள் சுவாச தடை நீங்கி நன்றாக உறங்கும்.
Tags: Right Ways Maintain Child Health
<<MORE POSTS>>
*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன?
*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்