நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 490 ஓட்டங்களை குவித்து புதிய கிரிக்கெட் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து அணி கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 444 ஓட்டங்களை பெற்றிருந்தமையே, ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிக ஓட்டமாக இருந்தது.
இந்த ஓட்ட எண்ணிக்கையை கடப்பதற்கு சர்வதேச அணிகள் எடுக்கும் முயற்சிகளும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் அயர்லாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணி அதிரடியாக ஆடி, 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 490 ஓட்டங்களை குவித்துள்ளது.
நியூஸிலாந்து அணியின் தலைவியும், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையுமான சுஷி பெடஸ் 94 பந்துகளுக்கு 24 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 151 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் மெடி கிரீன் 77 பந்துகளுக்கு 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 121 ஓட்டங்களை விளாசினார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக அமீலியா கெர் 45 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களை விளாச,வெட்கின் நிதானமாக 59 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி அதிரடியாக ஆடிய நியூஸிலாந்து மகளிர் அணி, ஆண்கள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சாதனையை இலகுவாக கடந்து முன்னிலைப்பெற்றுள்ளது.
அயர்லாந்து அணியின்கெரா முர்ரே 2 விக்கட்டுகளை வீழ்த்திய போதிலும், 10 ஓவர்களுக்கு 129 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதேவேளை அயர்லாந்து அணி குறித்த பாரிய இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
- துரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
New Zealand cricket team new record news Tamil, New Zealand cricket team new record news Tamil