(Mother tortured Three years old girl)
மூன்றரை வயது சிறுமி ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் அறையொன்றில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு, வெளிநாட்டிற்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்கியிருந்த வேளையில், குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட தாயை, குருநாகல் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உகும்பிய பிரதேசத்தில் திப்படுவாகமை என்ற கிராமத்தில் வசிக்கும் 23 வயதான தாய் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநாதை இல்லத்தில் இருந்து 16 வயதில் தப்பியோடி வந்து பல ஆண்களுடன் தொடர்ப்பு வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பெண்ணை நபரொருவர் திருமணம் முடித்துக்கொண்டார். சில காலங்களின் பின்னர் வெளிநாட்டிற்கு சென்ற இவர், நாடு திரும்பிய பின்னர் வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
இந்தக் கள்ளத்தொடர்பின் காரணமாக குறித்த பெண்ணுக்கு, பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. இந்தச் சிறுமியை தினமும் சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தனது மூன்றரை வயது மகளின் தலை, முகம் மற்றும் கண் பகுதியில் தாக்கி துன்புறுத்தி அறையில் பூட்டிவைத்துவிட்டு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி தலைமறைவாகியுள்ளார்.
குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட குறித்த பெண்ணின் கள்ளக் காதலனின் தாய், அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் பூட்டியிருந்த அறையின் கதவை உடைத்து இச்சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், வெளிநாடு செல்வதற்காக குடியேற்றம் மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த பெண் போலியான பெயரில் வெளிநாடு செல்லவிருந்த போதே, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
More Tamil News
- மலையகத்தில் வெள்ளத்தில் வீடுகள்; மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம்
- இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை
- ஒரே நாளில் ஆறு விபத்துக்கள், அதிவேக வீதியில் அவதானமாக பயணிக்கவும்
- தற்போதைய அரசியல்வாதிகள் அரசியலை புனித பணியாகச் செய்து வருகின்றனர் – அமைச்சர் ரிஷாட்
- நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு – 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Mother tortured Three years old girl