Woman Attacked Policeman Sydney
தாய்லாந்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் மீது போலியாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்த பெண் தற்போது மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
ஸ்டீவ் ரொச்சல் பிரான்கெஸ்கா பெம்போர்ட், என்ற 26 வயதான குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக் கூறி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிட்னியின் உள்ளக பகுதியான டார்லிங் ஹேர்ட்ஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அவரது காதலனை கைதுசெய்ய முயன்றபோதே இம்மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
இப்பெண் சர்ச்சைகளில் சிக்குவது இது முதற்தடவையல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த 2012 ஆம் ஆண்டு தாய்லாந்தில், முச்சக்கர வண்டி சாரதியொருவர் மீது போலியாக பாலியல் குற்றசாட்டொன்றை முன்வைத்து பின்னர் அங்கு சிறைத்தண்டனை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.