(kolkata knight riders beat Chennai Super Kings 2018)
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதனூடாக கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அத்துடன் முதலிடத்திலிருந்த சென்னை அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணிசார்பில் டோனி 43 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்த வீச்சில் பி.எஸ் சவ்லா மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி சுப்மான் கில் மற்றும் தினேஸ் கார்த்திக்கின் அதிரடியுடன் உதவியுடன் 17.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
சுப்மான் கில் 57 ஓட்டங்களையும், தினேஸ் கார்த்திக் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், சுனில் நரைன் 32 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சன்ரைசஸ் அணி முன்னேறியுள்ளதுடன், சென்னை அணி 2வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை 4வது இடத்திலிருந்த கொல்கத்தா அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
<<Tamil News Group websites>>