ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் இது தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. (“jangguri” storm approaching Japan tamil news)
இந்த புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் மிகப் பலத்த மழை பெய்யும். 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவிக்கிறது.
நேற்று இரவு டோக்கியோவில் நடைபெறவிருந்த வானவேடிக்கை திருவிழா புயல், மழையினால் பிற்போடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு ஜூலை மாதம், இயற்கை பேரிடர் மாதமாக மாறி விட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக கடுமையான அனல் காற்று வீசி அங்கு 80–க்கும் மேற்பட்டோர் பலியானதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த புயல், மழையினால் என்ன சேதங்கள் ஏற்படப்போகிறதோ என ஜப்பான் மக்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
tags :- “jangguri” storm approaching Japan tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- இளம் வயதில் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறிய முதல் இந்திய இளம்பெண் உலக சாதனை
- விமானிகள் இருவர் பறக்கும் விமானத்தில் செய்த காரியம்..!!
- காதல் கணவனை கத்தியால் குத்திக் கொடூரமாக கொன்ற பெண் ..! பரிதவிக்கும் குழந்தைகள் ..!
- உலகின் வயதான பெண்மணி மரணம்
எமது ஏனைய தளங்கள்