இந்தோனேசியா லம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
310
Indonesia powerful earthquake island Lampak tamil news

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அருகில் காணப்படும் லம்பாக் என்ற தீவுக்குட்பட்ட கடலுக்கு அடியில், சுமார் 7 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. (Indonesia powerful earthquake island Lampak tamil news)

இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக 43 சிறு சிறு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் பல தேதமடைந்துள்ளதுடன், பொதுமக்கள் வீதிகளில் திரண்டுள்ளனர். இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

tags :-Indonesia powerful earthquake island Lampak tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்