லண்டனில் நிலவும் காலநிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். (London tourists affected uneven weather tamil news)
லண்டனில் ஒரு வாரமாக காலநிலை சீரற்று உள்ளது. நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததினால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் 14 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. லண்டனின் மற்ற விமான நிலையங்களான- லூடன், கேட்விக் மற்றும் ஹீத்ரோ விமான நிலையங்களிலும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் – தாமதமாகியுள்ளன.
லண்டன் விமான கட்டுப்பாட்டு ஆணையமான ‘நட்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் உரிய பாதையிலும், உரிய நேரத்திலும் செல்லமுடியவில்லை. இடியும், மின்னலும் விமான போக்குவரத்தை உருக்குலைத்துள்ளன’ என தெரிவித்துள்ளது.
லண்டன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகளின் பயண திட்டம் மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து 3 வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- London tourists affected uneven weather tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- இங்கிலாந்தில் வெப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பனிமழை
- பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் “ஃபர்னெஸ் வெள்ளி” என பெயர் சூட்டல்
- இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே ஒஸ்ரியாவிற்கு விஜயம்
- ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிராகரிக்கப்பட்ட பிரெக்சிற் திட்டத்தின் முக்கிய விடயங்கள்
- உணவு மற்றும் மருந்து பொருட்களை சேமிக்கும் பிரிட்டன்
- லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து