அமெரிக்காவின் டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு – 5 பலி

0
332
Gunfire Texas US 5 killed

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். (Gunfire Texas US 5 killed)

டெக்சாஸின் ரோப்ஸ்டௌன் பகுதியிலுள்ள மருத்துவ சிகிச்சை நிலையம் மற்றும் அங்குள்ள வீடொன்றை இலக்குவைத்து நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக, ரோப்ஸ்டௌன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து இரண்டு சடலங்களும் மருத்துவ சிகிச்சை நிலையத்திலிருந்து இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதென தெரிவிக்கின்றனர்.

இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

tags :- Gunfire Texas US 5 killed

மேலதிக உலக செய்திகள்

எமது ஏனைய தளங்கள்