countries maximum 21 hours least 11 hours world
முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்துடன் முடிவடையும் என்றாலும் இந்த நேரங்கள் உலகில் மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலுமுள்ள ஒவ்வொரு நாடும் அமைந்திருக்கும் புவியியல் அமைப்பு மற்றும் நேர மண்டல சார்புகளுக்கு ஏற்ப நேரங்கள் கூடுதல் குறைவாக அமையும்.
இதனடிப்படையில் இந்த வருட ரமலானில் கூடுதல் குறைவு நேரங்களுடன் நோன்பு நோற்கும் நாடுகள் குறித்த சில புள்ளிவிபரங்கள்:
நீண்ட நோன்பு நேரமுடைய நாடுகள்:
1. ஐஸ்லாந்து – 20 மணிநேரம் 17 நிமிடங்கள் – அதிகாலை மணி 2.27 ஃபஜர் முதல் மாலை மணி 10.44 மஃரிப் வரை. (10.44 என்பது அங்கு மாலை தான் இரவல்ல)
2. பின்லாந்து – 19.25 மணிநேரம்.
3. கிரீன்லாந்து – 19.21 மணிநேரம்.
4. நார்வே – 19.19 மணிநேரம்.
5. சுவீடன் – 19.12 மணிநேரம்.
நோன்பு நேரம் குறைவான நாடுகள்:
1. சிலி – 10.33 மணிநேரம் (ஐஸ்லாந்தை விட 10 மணிநேரம் 44 நிமிடங்கள் குறைவு)
2. நியூஸிலாந்து – 11.35 மணிநேரம்.
3. தென் ஆப்பிரிக்கா – 11.47 மணிநேரம்.
4. பிரேஸில் மற்றும் ஆஸ்திரேலியா – தலா 11.59 மணிநேரங்கள்.
5. ஐக்கிய அரபு அமீரகம் – 14.52 மணிநேரம்
More Tamil News
- மலையகத்தில் துயரம் : வீடுகள் முற்றாக சரிந்த கொடூரம் (படங்கள் இணைப்பு)
- பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் கலந்துரையாடல்
- மண்சரிவு அபாயம் ; 105 குடும்பங்கள் வெளியேற்றம்
- 4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது
- பஸ் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com