(Afghanistan squad vs Bangladesh 2018 Dehradun)
பங்களாதேஷ் அணிக்கெதிராக அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான அணியில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எப்போதும் நியமிக்கப்படும் அணியே பெயரிடப்பட்டுள்ளது. அணியின் தலைவராக அனுபவ வீரர் அஸ்கார் ஸ்டானிக்ஸாய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தொடர்களில் அணியை சிறந்த முறையில் வழிநடத்திவந்தவர்.
அத்துடன் ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீட் கான், முஜிபூர் ரஹ்மான் மற்றும் மொஹமது நபி ஆகியோரும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஜுன் 3,5 மற்றும் 7ம் திகதிகளில் இந்தியாவின் டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டித் தொடரானது இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் முதலாவது இருபதுக்கு-20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணி விபரம் :
அஸ்கார் ஸ்டானிக்ஸாய் (தலைவர்), மொஹதமு சேஷாட், நஜிபுல்லா டர்காய், உஸ்மன் கஹானி, நஜிபுல்லா ஷர்டான், சமியுல்லா சென்வாரி, சஹபக், டர்விஸ் ரசூலி, கரீம் ஜனாட், மொஹது நபி, குல்படின் நயிப், ரஷீட் கான், சஹர்பூதீன் அஷ்ரப், முஜிபூர் ரஹ்மான், சபூர் ஷர்டான், அப்டப் அலாம்
- பிளே-ஆஃப் முதல் இறுதிப்போட்டி வரை!!! : முழுவிபரம் உள்ளே…
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினார் சரபோவா!
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>