கனடாவில் பிரபல உணவகம் முன் வேலை வாய்ப்புக்காக வரிசையில் நின்ற மாணவர்கள்! வீடியோ

0
45

கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டன் முன் வேலை வாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகத்திற்கு வேலை வாய்ப்புக்காக சென்ற நபரொருவர் அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர். பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள் அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக் கொண்டு பிறகு அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர். 

நிஷாத் பல இடங்களில் வேலை வாய்ப்புக்காக சென்றதாகவும் எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை இது எனது போராட்டம் நிறைந்த நாள் என்று கூறினார்.