ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து போதியளவான ஆதரவு கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
”ரணிலின் பிரச்சாரங்களுக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிலிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இணைந்துள்ள குழுவினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலை நிர்வகிக்க முடியாது. அதற்குத் தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.”என்றும் அவர் கூறியுள்ளார்.