இந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஷாருக்கான் முதலிடம்: விஜய், ரஜினி, கமல், அஜித் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்

0
39

பொலிவுட் களம் பல ஆண்டுகளாக இந்தியாவின் பொழுதுபோக்குகளில் முன்னணி சக்தியாக திகழ்கின்றது. குறிப்பாக ஹிந்தி மொழி பேசும் இரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருப்பினும், பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றி தென்னிந்திய சினிமாவின் எழுச்சியை எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் திரைப்படங்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றதுடன், தென்னிந்திய நடிகர்களை தொழில்துறையில் அதிக சம்பளம் வாங்கும் முதல் தரவரிசைகளுக்கு உயர்த்தியது.

இந்த நிலையில், போர்ப்ஸ் (Forbes) தனியார் பத்திரிக்கை நிறுவனம், உலக திரைப்படங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் இணையத்தளமான ஐ. எம். டி. பி (IMDb) தரவுகளை பயன்படுத்தி பொலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் அதிகளவு சம்பளம் பெறும் முதல் 10 இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த பட்டியலில் நடிகர் ஷாருக்கான் கணிசமான வித்தியாசத்தில் முன்னணி வகிக்கின்றார். அதேநேரம் சல்மான் கான், அமீர் கான், அல்லு அர்ஜுன், அக்‌ஷய் குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் பட்டியலில் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர்.

ஷாருக்கான்: சொத்துமதிப்பு 6300 கோடி ரூபா

ஷாருக்கான் பல தோல்விகளை கண்டபோதிலும், அவரது சமீபத்திய வெற்றிகளான ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் உலகளவில் 2000 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் செய்து அவரது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தின. அத்துடன், ஷாருக்கானின் சமீபத்திய வெளியீடான டுங்கி திரைப்படம் பொலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக அவரது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

சல்மான் கான் : சொத்துமதிப்பு 2900 கோடி ரூபா

சல்மான் கான் ரொமாண்டிக் லீடிலிருந்து ஆக்ஸனுக்கு மாறியவர். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகத் தொடர்கின்றார். அவரது சமீபத்திய படமான டைகர் 3 உலகம் முழுவதும் 466.63 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

அக்‌ஷய் குமார் : சொத்துமதிப்பு 2500 கோடி ரூபா

அக்‌ஷய் குமார் தமது நகைச்சுவை பாத்திரங்கள் மற்றும் சமூக தாக்கம் கொண்ட பங்களுக்காக கொண்டாடப்படுகிறார். 2023 ஆம் ஆண்டு பெரியளவிலான வெற்றிப்படங்களை கொடுக்காவிட்டாலும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்த OMG 2 உலகளவில் 221 கோடி ரூபா வசூல் சாதனை படைத்தது.

அமீர்கான் : சொத்துமதிப்பு 1862 கோடி ரூபா

மிக நுட்பமான திரைப்படத் தயாரிப்பில் பெயர் பெற்ற அமீர்கான், பொலிவூட்டில் மிஸ்டர் பேர்பெக்‌ஷனிஸ்ட் என அழைக்கப்படுகிறார். ‘லால் சிங் சத்தா’ சிறப்பாக வெற்றியடையவில்லை என்றாலும், டங்கல் மற்றும் பிகே போன்ற வெற்றிப் படங்களின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் சிதாரே ஜமீன் பர் மூலம் அவர் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

விஜய் : சொத்துமதிப்பு 474 கோடி ரூபா

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நபரான தளபதி விஜய், 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வெற்றியைக்கண்டார். அவரது படங்களான வாரிசு மற்றும் லியோ முறையே உலகளவில் 300 கோடி ரூபா மற்றும் 612 கோடி ரூபாவை வசூலித்தன.

ரஜினிகாந்த் : சொத்துமதிப்பு 430 கோடி ரூபா

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற அடையாளமாக கருதப்படுபவர்களில் ஒருவரான ரஜினிகாந்த் மரியாதை மற்றும் பாராட்டுக்களுக்கு பெயர் பெற்றவர். அவரது அண்மைய படமான ஜெயிலர் அவருக்கு 110 கோடி ரூபாவை சம்பாதித்து கொடுத்து அவரது அந்தஸ்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதுதவிர, குறித்த பட்டியலில் அல்லு அர்ஜுன் 350 கோடி ரூபா சொத்துமதிப்புடனும், பிரபாஸ் 241 கோடி ரூபா சொத்துமதிப்புடனும், நடிகர் அஜித் குமார் 196 கோடி ரூபாவுடனும், நடிகர் கமல்ஹாசன் 150 கோரி ரூபா சொத்துமதிப்புடனும் அடுத்தடுத்த இடங்களில் காணப்படுகின்றனர்.