தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பலமானது: சி.வி.கே.சிவஞானம் திட்டவட்டம்

0
53

சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக மீண்டும் கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை இல்லை. கூட்டம் நடைபெற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியில் அவர் இவர் என பார்த்துக்கொண்டு இருந்தால் கூட்டத்தை நடத்த முடியாது. வந்த உறுப்பினர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்களே. அவர்கள் எடுத்த தீர்மானம் சரி.

எடுத்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதனை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதனை அவர்கள் சொல்லலாம். ஆனால் கட்சி தீர்மானம் உரிய கோரத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. எனவே அந்த தீர்மானம் வலுவான தீர்மானம்.” என தெரிவித்தார்.