தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்தினரின் அவல நிலை; ரஷ்யா, உக்ரைன் களமுனைகளில்!

0
108

 விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவம் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சென்று அந்த இரு நாடுகளுக்காக தனித்தனியாக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் முகாம் உதவியாளர்களாக அழைத்து செல்லப்பட்டு ரஷ்ய-உக்ரேனிய போரில் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது இராணுவத்தில் இருந்தவர்கள் ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் இணைந்துள்ளனர், இலங்கை இராணுவம் இரண்டு தரப்பினராக பிரிந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஓய்வு பெற்ற நமது இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாமைாயால் இவ்வாறு நடக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம், ஆனால் இன்று இலங்கை இராணுவம் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகிறதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

அதேவேளை  அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் எனும் முதுமொழி  பொய்த்துப்போகவில்லை.  அன்று ஈழதமிழ் மக்களை  ஈவிரக்கமின்றி  கைகோர்த்து  படுகொலை  செய்தவர்கள் , இன்று இருபிளவுகளாக  பிரிந்து நின்று ஒருவர் ஒருவர்  தாக்கும் நிலமை தோன்றியுள்ளது.