கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்: முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு

0
30

கனேடியத் தமிழர் பேரவை’யின் (CTC) தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரவீனா ராஜசிங்கம் தலைமையிலான கனேடியத் தமிழர் பேரவையின் நிர்வாகம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அண்மைய நாட்களாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.

இமாலைய பிரகடனம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இந்த கோரிக்கை வலுவடைந்திருந்தது. எவ்வாறாயினும், Pickering – Uxbridge தொகுதியின் Conservative கட்சியில் வேட்பாளர் தேர்தலில் ரவீனா ராஜசிங்கம் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதவி விலகியதை அடுத்த ஏற்பட்ட வெற்றிடத்தை யார்? நிரப்புவார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.