ஈரானின் அடுத்த திட்டம் மூன்றாம் உலகப் போருக்கான நகர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை

0
53

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான மோதல் மூன்றாம் உலகப்போராக வெடிக்குமா என்ற அச்சம் உலக நாடுகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் அடுத்த திட்டம் தொடர்பில் நிபுணர்கள் பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 13ஆம் திகதி இரவில், ஈரான், இஸ்ரேல் மீது 300க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தியது. எனினும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உதவியுடன் இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை, ஈரானிலுள்ள Isfahan நகர் மீது நடத்தப்பட் தாக்குதல்களில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், அதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது.

அதாவது, Isfahan இல் அணு மின் நிலையங்கள் காணப்படுகின்றமையால், ஈரானின் அணு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் நடத்திய ஒரு ஒத்திகையாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்தவகையில், இஸ்ரேல் ஈரானுடைய அணு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துமானால், அது பெரிய போருக்கு வழிவகுக்கும் என்பதுடன் அணு ஆயுத போராகக் கூட வெடிக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதே வேளை, ஈரான் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாமல், தனது ஆதரவாளர்களான ஆயுதக்குழுக்கள் மூலம் பயங்கர தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஈரானுக்கு, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிக்கள் மற்றும் ஈராக்கிலுள்ள சில குழுக்கள் என பல ஆயுதக் குழுக்களின் ஆதரவு உள்ளது. 

எனவே, இந்த ஆதரவுக்குழுக்கள் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு பெரிய போர் வெடித்து, அது மூன்றாம் உலகப்போராக மாறவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் யூகிக்கின்றனர்.

மேலும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு, காசாவில் இஸ்ரேலுடன் இரண்டாவது பயங்கர மோதலுக்குத் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது கச்சா எண்ணெய் விலையும், தங்கம் விலையும் உயர்ந்துவருவதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், இஸ்ரேல் எடுக்கும் முடிவு ஈரானை மட்டுமல்ல, உலக நாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.