மைத்திரியை கொலை செய்ய திட்டம்; புட்டு புட்டு வைத்த இராணுவ ஆய்வாளர்!

0
123

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  கருத்துக்களை யாரும் புறக்கணிக்க முடியாது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.

நேர்காணல் ஒன்றில் வழங்கிய செவ்வியிலேயே இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மைத்திரி வாக்குமூலமும் வழங்கியிருந்தார். இந்த நிலையில் அப்போதைய நாட்டின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதை சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் மைத்திரி மீது சுமத்தப்பட்டது என்றும் அரூஸ் குறிப்பிட்டார்.

மேலும், மைத்திரியை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதி முயற்சிகள் அதன் உண்மைத் தன்மை உள்ளிட்டவைப் பற்றியும் அரூஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.