மகனுடன் சந்தையில் மீன் வாங்கிய அருண் விஜய்: இணையத்தினை கலக்கும் அட்டகாசமான புகைப்படங்கள்

0
48

நடிகர் அருண் விஜய் மகனுடன் முச்சக்கர வண்டியில் மீன் சந்தைக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”மிஷன்” வெற்றி நடை போட்டு வருகின்றது.

அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி தீயாக நடித்து வருகின்றார். என்னதான் அவர் வேலையில் தீவிரமாக இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட தவறுவதில்லை.

அண்மையில் அவரின் தங்கை மகளின் திருமண கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

மீன் சந்தையில் அருண் விஜய்

இந்த நிலையில் தனது மகன் அர்னவுடன் மீன் சந்தைக்கு சென்று மீன் வாங்கியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் “எளிமையான வாழ்க்கை எளிமையான மக்கள் இவர்களிடம் இருந்து அதிக அன்பும் அக்கறையும் கிடைக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.