‘மலையகத்தில் ஆசிரிய பற்றாக்குறைகள்விரைவில் தீர்க்கப்படும்’

0
62

“மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின், முதலாவது கூட்டம் குழு அறை 8 இல் நடைப்பெற்றது. இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இக் கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரிய பற்றாக்குறைகள் மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர்.