புதிதாக ஒரு கையடக்கத் தொலைபேசி அறிமுகமாகும்போது அதனை சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தலாம். தற்போத வரக்கூடிய ஸ்மார்ட் போன்களில் 5000 mAh முதல் 6000 mAh பேட்டரிகளே உள்ளன.
ஆனால் விரைவில் அறிமுகமாகவுள்ள Energizer hard case p28k என்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் 28,000 mAh பேட்டரி செல் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் கீழே விழுந்தால் உடைந்துவிடுமோ, அல்லது தண்ணீர் உள்ளே போய்விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. சுமார் 122 மணிநேரத்துக்கு எதுவித தடையும் இல்லாமல் உரையாடலாம்.
இந்த தொலைபேசியானது, 6.78” LCD பேனல் மீடியா டெக் MT6789 சிப்செட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM, 256GB ஸ்டோரேஜில் கிடைக்கிறது. ஸ்மார்ட் போன் அதிக காலம் உழைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த கையடக்கத் தொலைபேசி பொருத்தமானது.