ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியவர்கள் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை

0
71

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் 

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது.