போராட்டத்தின் போது, பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ரணில் மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய ‘சதி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜிதிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்ததாகவும் அந்த புத்தகத்தின் 163ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிடம் பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது தன்னால் உடனடியாக பதவியை ஏற்க முடியாது தெரிவித்தார்.
அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய ‘சதி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.