Fold/Flip ஸ்மார்ட்போன் உற்பத்தியில் களமிறங்கும் ஆப்பிள் நிறுவனம்

0
162

கடந்த சில வருடங்களாக மொபைல் துறையில் Foldable, Flip ஸ்மார்ட்போன்களுக்கான பெறுமதி அதிகரித்தவண்ணம் உள்ளது.

முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பிசினஸ் துறையை சார்ந்த வாடிக்கையாளர்கள் இதன் மீது அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இப்போதைக்கு இந்த பிரிவில் சாம்சங், மோட்டோரோலா, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் சியோமி போன்ற பிரபல நிறுவனங்கள் புதுப் புது மாடல்களை வெளியிட்டு வருகின்றன.

இப்போது இந்த பிரிவில் போட்டிக்கு களம்காண ஆப்பிள் நிறுவனமும் தயாராகி இருக்கிறது.

ஆரம்பக் கட்டமாக இரண்டு Flip டைப் மாடல்களை டிசைன் செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இதனால், ஆப்பிள் iPhone 16 உடனே புதிய Fold/Flip மொபைலை 2025ம் ஆண்டு இறுதியில் தான் விற்பனைக்கு தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறதாம் ஆப்பிள்.

இப்போதைக்கு ப்ரொடக்ஷன் டிசைனில் மட்டுமே  வெளியிடவுள்ளது.

எனவே, இந்த ஆப்பிளின் Flip/Fold ஸ்மார்ட்போன் சந்தைக்கு அறிமுகம் ஆவதென்பதை 2026ல் வேண்டுமானால் எதிர்பார்க்கலாம்.

மேலும், ஆசியாவில் இருக்கும் தனது தொழிற்சாலையில் ஏதேனும் ஒரு மாடலை தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் வெளியான தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

ஆப்பிள் கடந்த 2028ம் ஆண்டு Fold ஸ்மார்ட்போன் தயாரிக்க முடிவு செய்தது.

ஆனால், அதில் சில தொழல்நுப்ட சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தால், 2020ம் ஆண்டு இந்த டெவலப்மன்ட் பிராஸசை ஹோல்டு செய்தது ஆப்பிள்.

மேலும், ஆப்பிள் என்ஜினியரிங் டீம், Fold/Flip ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் போது டிஸ்பிளேயில் உண்டாகும் க்ரீஸ் (கோடு) ஏற்படாமல் இருக்கும் வகையில் டிஸ்பிளே வடிவமைக்க முயற்சித்து வருகின்றனர்.

இதனால், ஒருவேளை ஆப்பிள் Flip ஸ்மார்ட்போன் முற்றிலுமாக சிறந்த Flat டிஸ்பிளே கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதே போல, ஆப்பிள் நிச்சயம் Flip மொபைல் வெளியிடும் என்றும் நம்ப முடியாது, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் Hold செய்ய வாய்ப்பிருக்கிறது.