அழகிய தருணங்களை புகைப்படங்களாக எடுத்துவைக்க ஒருவரும் தவறியதே இல்லை. அந்த வகையில் தற்போது AI தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எடுத்து வைத்திருக்கும் புகைப்படங்களை தத்ரூபமாக வீடியோகவாக உருவாக்க முடியும்.
புகைப்படத்திலிருந்து எப்படி வீடியோ உருவாக்குவது?
- runwayml.com என்ற இணையத்தளம் புகைப்படங்களிலிருந்து வீடியோவை உருவாக்க உதவி செய்யும்.
- முதலாவது இந்தப் பக்கத்தில் உங்களுக்கென பிரத்யேகமான உறுப்பினர் கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
- இதன் பின்னர் இணையத்தளத்தில் image to video என்று இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
- இதனைத் தொடர்ந்து மோஷன் ப்ரஷ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இந்த ஆப்ஷனில் நீங்கள் புகைப்படத்திலிருந்து வீடியோவாக மாற்ற விரும்பும் புகைப்படத்தை தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.
- எந்த மாதிரியான டிசைன் மற்றும் நிறம் வேண்டும் என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்.
- பின்னர் Genarate ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் புகைப்படத்தை வீடியோவாக மாற்றிக் கொடுக்கும்.