காசாவில் மார்ச் 4 ஆம் திகதிக்குள் போர் நிறுத்தம்!

0
105

காசாவில் மார்ச் 4 ஆம் திகதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் அ இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் தீவிர தாக்குதல்

அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், மார்ச் 4 ஆம் திகதிக்குள் நிறுத்தம் ஏற்படும் அதிபர் பைடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அதன்படி மார்ச் 4 ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புவதாக பைடன் குறிப்பிட்டார்.