சஜித், அனுரவை விட ரணில் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்: மாற்றுக் கொள்கை திட்டங்கள் இல்லை – உபுல் சாந்த

0
92

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் ஒப்பிடும் போது ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க மிகப் பெருத்தமானவர் என சமூக ஆர்வலரும் ஆசிரியருமான உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச மிகவும் முட்டாள்த்தனமான மனிதர். அவருடன் பழகிய போது அதனை புரிந்துக்கொள்ள முடிந்தது. சஜித் பிரேமதாச என்பவர் மேடைகளில் கூறுவதை போல் இரவில் வேலை செய்யும் நபர் அல்ல.

நீச்சல் தடாகத்தில் குளிக்கும் போதும் கூட சுற்றியும் பாதுகாப்பு பரிவாரங்களை வைத்துக்கொண்டே குளிப்பார். மேடைகளில் கூறுவதை போல் நடைமுறை வாழ்க்கையில் நடந்துக்கொள்வதில்லை.

அதேபோல் அனுரகுமார திஸாநாயக்க மக்கள் அறிந்துள்ள ஊழல், மோசடிகள் பற்றி மீண்டும் உரத்த குரலில் கூறுவதை மட்டுமே செய்து வருகிறார். இதனை விடுத்து பொருளாதாரமோ அல்லது நாட்டை கட்டியெழுப்பும் எவ்வித புதிய கொள்கை திட்டங்களோ அவரிடம் இல்லை.

இவர்களுடன் ஒப்பிடும் போது, சர்வதேசத்துடன் ஏதோ ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு வேலை செய்யக்கூடிய ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் எனவும் உபுல் சாந்த சன்னஸ்கல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உபுல் சாந்த சன்னஸ்கல, ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து செயற்பட்டதுடன் பொதுத் தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிட்டுள்ளார்.

புத்த பகவானை அவமதிக்கும் வகையில் ‘Budunge Rasthiyaduwa’ என்ற நூலை வெளியிட்டமைக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு சன்னஸ்கல கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டிருந்தார்.