2024 நோபல் பரிசு பட்டியலில் எலான் மஸ்க்

0
96

2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள் வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.

2024 நோபல் பரிசுப் பட்டியலில் எலான் மஸ்க் | Elon Musk On 2024 Nobel Prize List

இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முற்போக்கு கட்சியை சேர்ந்த மரியஸ், வெளிப்படையான பேச்சு மற்றும் பல்வேறு தரப்பு வாதங்களையும் அனுமதிக்கும் எலான் டிவிட்டரை வாங்கி அதன் தணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் சுதந்திர கருத்துரிமையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதால் எலான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என மரியஸ் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய டிவிட்டர் நிர்வாகத்தில் முடக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டவர்களின் கணக்குகள் எலான் பொறுப்பேற்ற பின் தளர்வாக்கப்பட்டன.