ஹந்துன்நெத்தி விபத்தில் சிக்கியதாக பரவும் தகவல்.. எதிர்கட்சியின் பொய் பிரசாரம்!

0
88

தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த செய்திகளை மறுத்துள்ள ஹந்துன்நெத்தி, இது எதிர்கட்சியின் அரசியல் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பொய்யான பிரசாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் எவ்வித வாகன விபத்திலும் சிக்கவில்லை என்றும், நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.