‘யுக்திய’ நடவடிக்கை.. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

0
119

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய ஒரு கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளது.

விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.

‘யுக்திய’ நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையானவர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு | Court Orders Handover Vehicles Owners

வழக்கு விசாரணையின் போது, மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என பாதுகாப்பு கவுன்சில் குற்றம் சாட்டியது.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டது.