தென் கொரிய பாப் இசையை கேட்டு ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை விதித்த வட கொரிய அரசாங்கம்..!

0
136

தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்த 16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசாங்கம் விதித்துள்ளது.

இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த மக்களை தண்டிக்கும் போக்கைக் கையாண்டு வருகின்றது. 

கடந்த 2020 -ம் ஆண்டு இதற்காக பிரத்யேக சட்டத்தைக் கொண்டுவந்தது. தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்களை ரசிப்பதை தடை செய்யும் சட்டம் அது. 

தென் கொரிய பாப் இசையை கேட்டு ரசித்த சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாப நிலை! | Boys Jailed Listening To South Korean Pop Music

அந்தச் சட்டத்தின்படியே அந்த இரண்டு சிறுவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தென் கொரிய பொழுதுபோக்கை பார்க்கும் வடகொரியர்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை வடகொரிய அரசு வழங்குவது இது முதல் முறையல்ல.