உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் குண்டு வெடிப்பு: 25 பேர் உயிரிழப்பு

0
118

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியில் அமைந்துள்ள சந்தை மீது நேற்று நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களை உக்ரைன் படையினர் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டு உக்ரைன் இதுவரை பதிலளிக்கவில்லை.

டொனெட்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள டெக்ஸ்டில்சிக் பகுதியில் இருக்கும் சந்தையில் நடந்த இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே ரஷ்யாவின் கிங்செப் மாவட்டத்தில் உள்ள Ust-Luga துறைமுகத்தின் இரசாயன போக்குவரத்து முனையத்தில் நேற்று (21) இரண்டு பெரிய வெடிப்புகள் மற்றும் பெரும் தீ விபத்து ஏற்பட்டன. இந்த சம்பவங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பர தாக்குதல்களாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனின் நான்கு ட்ரோன் தாக்குதல்களே இரசாயன கப்பல் முனையத்தில் எரிவாயு தாங்கி வெடித்தமைக்கு காரணம் என ரஷ்ய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.