மலேசியாவின் ஜோகூர் பாருவில் பொது இடத்தில் நிர்வாணமாக நடந்து திரிந்த ஆண்

0
284

மலேசியாவின் ஜோகூர் பாரு மாநிலம் பெர்மாஸ் ஜெயா என்ற பிரதேசத்தில் பொது இடத்தில் நிர்வாணமாக சென்ற வெளிநாட்டவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் 37 வயதான அந்த நபரை கைது செய்துள்ளனர்.

தங்கும் விடுதியின் முகாமையாளர் ஒருவர் வழங்கி தகவலுக்கு அமைய அந்நபர் கைது செய்யப்பட்டதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ரவுப் செலமட் தெரிவித்துள்ளார்.

தனது காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் விரக்தியடைந்து தான் நிர்வாண கோலத்தில் திரிந்ததாக அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்த நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் மற்றும் இரண்டும் விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் 509 ஆவது பிரிவின் கீழ் அந்த நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரவுப் செலமட் குறிப்பிட்டுள்ளார்.