விஜய் தேவரகொண்டா ரஷ்மிகாவுடன் நிச்சயதார்த்தமா?

0
240

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றது. விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தனாவும் சேர்ந்து கீத கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தார்கள்.

அதன் பிறகு டியர் காம்ரேட் படத்தில் நடித்தார்கள். கீத கோவிந்தம் வெளியானதில் இருந்தே விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது.

ஆனால் ரஷ்மிகாவோ, விஜய் தேவரகொண்டாவோ காதலை இதுவரை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தான் நிச்சயதார்த்தம் என கூறப்படுகிறது. வழமையாகவே சினிமா பிரபலங்கள் நண்பர்களாக இருந்தால் இது போன்ற வதந்திகள் வருவது சகஜம்.

நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்களும் திரையுலகில் அதிகம். விஜய் தேவரகொண்டாவையும், ரஷ்மிகாவையும் கணவன், மனைவியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகின்றார்கள்.

படப்பிடிப்புகளுக்காக ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்றபோதே இது காதல் தான் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துவிட்டார்கள். இந்த திருமண சர்ச்சை எல்லாம் சாதாரணம் தான்.