முதல் நாளில் ரூ 178 கோடி வசூலித்த ‘சலார்’: 2023 இன் புதிய இமாலய சாதனை!

0
213

கே.ஜி.எப் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் – பிரித்விராஜ் நடித்து நேற்று வெளியான திரைப்படம் சலார். இந்த படம் முதல் நாளில் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்துள்ளது. பல வெற்றிப் படங்களை முறியடித்து முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த படமாக ‘சலார்’ மாறி இருக்கிறது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு வெளியான அனைத்துப் படங்களிலும் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்கள் ‘அனிமேல்’, ‘ஜவான்’, ‘பதான்’.

இந்த படங்களின் சாதனையை எல்லாம் முறியடித்துள்ள சலார் முதல் நாளில் உலகம் முழுவதும் 178.7 கோடிகள் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.