ஆண்டு இறுதி போலீஸ் நடவடிக்கைகள்: சட்டப்படி சரியானதா? இதன் பின்னணி என்ன?

0
118

நாடாளவிய ரீதியில் தற்போது போதைப்பொருள் வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கைகள், சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது வாகானங்கள் கைப்பற்றப்படுகின்றது. வருட இறுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் அனைத்தும் சட்டரீதியில் சரியான விடயமா?

இரவு வேளைகளில் பொலிஸார் வீடுகளுக்குள் புகுந்து சோதனை மேற்கொள்வது, திடீர் சோதனை என்பன சாதாரண மக்களுக்கு அசொளகரியத்தை கொடுக்காதா?

மிக ஏழ்மை நிலைமையில் உள்ளவர்களால்தான் கோடிக்கணக்கான பணம் புரளும் போதைப்பொருள் வியாபாரத்தில் முக்கியஸ்தர்களா?

வருட இறுதியில் பொலிஸார் முன்னெடுக்கும் விடயங்கள்: சட்டரீதியில் சரியா? இதன் பின்னணி என்ன? | All Actions Taken The Police Are Legal Sri Lanka

மிக சாதாரணமானவர்களின் வீடுகளிலே சோதனை, வீடியோ எடுத்து முன்னெடுக்கப்படுகின்றது. மிகப்பெரிய செல்வந்தர்களின் வீடுகள், நட்சத்திர விடுதிகள், சொகுசு பங்களாக்கள், உயர்அதிகாரிகளின் வீடுகள் என எவையும் சோதனை செய்து வீடியோ வெளியிட முடியவில்லை.

ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களை சொத்து சேர்ப்பு அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எதிர்நோக்குகின்றார். அதேபோன்ற குற்றச்சாட்டுக்கள், நீதிமன்ற தீர்ப்பை தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபரும் எதிர்கொள்ளுகின்றார்.

ஆகவே தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பு, போதைப்பொருளுக்கு எதிரான போர் என பிரகடனப்படுத்தி சாமானியர்களை பலிக்கேடாக மாற்றும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றதா?

வருட இறுதியில் பொலிஸார் முன்னெடுக்கும் விடயங்கள்: சட்டரீதியில் சரியா? இதன் பின்னணி என்ன? | All Actions Taken The Police Are Legal Sri Lanka

அல்லது போதைப்பொருள் வியாபாரிகளுக்கிடையிலான மோதலில் ஒரு தரப்பு மீது பொலிஸார் முன்னெடுக்கும் நடவடிக்கையா?

சாதாரணமாக கைது செய்யப்படுபவர்களுன் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றதா? அடிப்படை உரிமைகளை மீறாதுதான் பொலிஸார் செயற்பாடுகள் அமைகின்றதா?

தற்போது ஒரு விசேட திட்டம் முன்னெடுக்க முடியுது என்றால், முன்னர் இதை செய்ய விடாது தடுத்தது யார்?இந்த. விசேட திட்டத்தில் மிகப்பெரிய புள்ளிகளை கைப்பற்ற முடியாது இருப்பதற்கு காரணம் என்ன?

வருட இறுதியில் பொலிஸார் முன்னெடுக்கும் விடயங்கள்: சட்டரீதியில் சரியா? இதன் பின்னணி என்ன? | All Actions Taken The Police Are Legal Sri Lanka

இதுவரை நட்சத்திர விடுதிகள், Nightclubs, சூதாட்ட மையங்கள், இவற்றை சுற்றியுள்ள இடங்களில் வீடியோவுடன் தேடுதல் முன்னெடுக்கப்படவில்லை.

போதைப்பொருளுக்கும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் தொடர்பு, பணக்கார்ர்களுக்கு தொடர்பு இல்லை என்ற மாதிரி ஒரு ஓட்டம் ஓடுறிங்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி இவ்விடயம் சரியா? என முகநூலில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.