நடு நடுங்க வைத்த டிமான்டி காலனி 2: நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்த ட்ரைலர்

0
128

‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாவது பாகத்தின் ட்ரைலர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த நிலையில் டிமான்டி காலனி 2 படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த ட்ரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.