களத்தில் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

0
153

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் மருத்துவம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகள் இன்றி தவித்தனர்.

பொது மக்களுக்கு அரசாங்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து, நடிகர்களும் உதவிகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் மக்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில் காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களைத் தடுக்கும் நோக்கில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாமானது, வருகின்ற 14-ஆம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.