சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்புக் கொடி காட்டியது

0
150

அரசியலமைப்பு பேரவையின் விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிட்டு அரசியலமைப்பை மீறிய காரணத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் செய்ய சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்புக் கொடி காட்டியுள்ளதாகவும் தேர்தல் காலத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதிக்கும் அரசியல் அமைப்புச் சபைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

மேலும் தற்போதைய நிறைவேற்று அதிகாரம் சுயாதீன நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைவதாகவும், ஜனாதிபதியின் இந்த முயற்சி சட்டவிரோதமானது எனவும் அவர் கூறியிருந்தார்.