பிறந்த மேனியாக இமய மலையில் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர்!

0
146

டிசம்பர் 10ம் திகதி 1980ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் வித்யும் ஜமால். வில்லன் நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக சில இந்தி படங்களில் நடித்து வரும் வித்யுத் ஜமால் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார்.

இதனால், பிறந்த மேனியாக இமய மலையில் உள்ள காடுகளிலும் நதிகளிலும் ஆதிவாசி மனிதனை போல கொண்டாடி வரும் நிலையில், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முழு நிர்வாணமாக இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்களையும், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்களையும் வித்யுத் ஜமால் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் அஞ்சான் படத்தில் நண்பனாக நடித்திருந்த வித்யுத் ஜமால் அதன் பின்னர் பாலிவுட்டில் கமாண்டோ படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து மாஸ் காட்டினார். தொடர்ந்து ஜங்க்லீ, குதாஃபிஸ், தி பவர், சனக், குதாஃபீஸ் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிறந்தநாள் அதுவுமாக வித்யுத் ஜமால் இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.