சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது!

0
43

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5,160,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 51, 600 சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய நபர் கொழும்பு – மோதரை பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.