இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்; மேலும் நீடிக்க ஹமாஸ் தயார்

0
149

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்க ஹமாஸ் தரப்பினர் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் நான்கு நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க ஹமாஸ் தரப்பினர் தயாராக உள்ளனர்.

இதுவரை 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர். 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் பழைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.